சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 31 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மக்கள் கூடுவதை தவிர்க்க கன்னியாகுமரி மாவட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நீர் வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் வருகிற 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 1, 2, 3ஆம் தேதி ஆகிய நாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினங்களில் கன்னியாகுமரி பூம்புகார் படகு சேவை திற்பரப்பு நீர்வீழ்ச்சி மற்றும் கடல் பகுதியில் படகு போன்றவை இயங்கவும் அனுமதி மறுத்துள்ளது. பொதுமக்கள் கொரோனாவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் தவறாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.