பாமகவின் கனவு நிறைவேறியது.! தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் - ராமதாஸ் மகிழ்ச்சி

By Ajmal Khan  |  First Published Apr 19, 2023, 9:21 AM IST

தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் நடைபெறும் என வெளியான அறிவிப்பு  பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி அளிப்பதாக  தெரிவித்துள்ள ராமதாஸ் தமிழை மத்திய அலுவல் மொழியாக்க  வேண்டும்  என கேட்டுக்கொண்டுள்ளார். 


தமிழில் மத்திய அரசு தேர்வுகள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வு தமிழில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், மத்திய அரசின் பணியாளர்தேர்வாணையம் நடத்தும் (Staff Selection Commission - SSC) நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும்,  ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட  13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது! மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும்,  நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த  25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.  

Latest Videos

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு.? சட்டப்பேரவையில் தீர்மானம்

தமிழ் மத்திய அலுவல் மொழியாக்கனும்

அதற்காக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான  உறுதிமொழிகளைப் பெற்றுக் கொடுத்தது.  பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்மொழியில் போட்டித் தேர்வு கனவு நனவானதில் மகிழ்ச்சி! தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.  அதற்காக  தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்; வெற்றி பெறும்! என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

 அடுத்தடுத்து ஓபிஎஸ் - டிடிவி தினகரன் அணி நிர்வாகிகளை தட்டி தூக்கும் இபிஎஸ்- உற்சாகத்தில் அதிமுக நிர்வாகிகள்

click me!