உங்களுக்குனா மட்டும் ரூ.50,000..! ஆனா இதுக்கு மட்டும் ரூ.600 …பாயின்ட்ட பிடிச்ச பாமக தலைவர் ராமதாஸ்..!

By thenmozhi gFirst Published Nov 20, 2018, 3:56 PM IST
Highlights

கஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்து உள்ளது. பல்லாயிர மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. மின் கம்பங்கள் பாதியில் உடைந்து பழுதடைந்து உள்ளது.

கஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்து உள்ளது. பல்லாயிர மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. மின் கம்பங்கள் பாதியில் உடைந்து பழுதடைந்து உள்ளது.இதுவரை ஏற்படாத அளவிற்கு இந்த முறை கஜா புயலால், தென்னை மரங்கள் பெருமளவு சாய்ந்து விட்டது. யாரும் எதிர்பார்க்காத இந்த சேதம் மக்களை வெகுவாக பாதித்து உள்ளது.

பல ஆண்டுகளாக  மிகவும் கடினப்பட்டு, வளர்த்து வந்த தென்னை மரங்கள் திடீரென கஜா புயலால் இப்படி அடியோடு சாய்ந்து போனதை பார்க்கும் போது சாதாரண மக்களுக்கே வயிறு எரிகிறது. ஆனால் இதை வளர்த்து  இதனையே நம்பி இருந்த விவசாயிகளின் நிலை நினைத்து கூட பார்க்க முடிய வில்லை.. 

இது ஒரு பக்கம் இருக்க சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக தமிழா அரசு அறிவித்து இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது  கஜா புயலால் அதிக வேரோடு சாய்ந்து போன மரத்திற்கு வெறும் ரூ.600 நிவாரண தொகையாக  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த தொகை கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்து வரும் நிலையில்.பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த தமிழகஅரசு கஜா புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு ரூ.600 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

click me!