வங்க கடலில் புதிய புயல்? மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை!

Published : Nov 20, 2018, 11:50 AM IST
வங்க கடலில் புதிய புயல்? மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை!

சுருக்கம்

வங்கக் கடலில் மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். இதனால், அவர்களது வாழ்வாதாராம் கேள்விக்குறியாக உள்ளது என விரக்தியடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். இதனால், அவர்களது வாழ்வாதாராம் கேள்விக்குறியாக உள்ளது என விரக்தியடைந்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட கஜா புயலால் தென் தமிழகத்தில் 6 மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து, சாப்பாடு கூட கிடைக்காமல் இதுவரை தவித்து வருகின்றனர். சில கிராமங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் இன்று வரை அங்குள்ள மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். 

இதனை சீரமைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், பணிகள் மெத்தனமாக நடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்து வலுபெற்றுள்ளது. இதனால், ராமநாதபுரம் முதல் சென்னை வரை உள்ள கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது

.

மேலும், மன்னார்வளைகுடா கடல் பிராந்தியத்தில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், இதையொட்டி கடல் சீற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதையெடுத்து, இயல்பு நிலை திரும்பும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீன்பிடி அனுமதி சீட்டையும் ரத்துசெய்துள்ளனர். இதனால் சுமார் 1800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வதாரம் கேள்விக்குறியாகிவிட்டது என மீனவ மக்கள் குமுறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?