விடாது துரத்தும் பேய் மழை..! மீண்டும் அதிவேக காற்று மழை....முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்...!

By thenmozhi gFirst Published Nov 20, 2018, 11:29 AM IST
Highlights

கடலூர் மாவட்டத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும்,70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கையால் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வங்ககடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று அடுத்த 24மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழக நோக்கி வருகிறது. இதனை தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெறாமல் உள்ள பல பகுதிகளில் மேலும்  பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.

இதனை தொடர்ந்து பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அத்தியாசவசிய பொருட்களை பொதுமக்கள் சேகரித்து வைத்துக்கொண்டால் மழையை எதிர்கொள்ளலாம் என்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பாம்பன் பாலத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன.கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூரில் மாங்குடி ,கூடூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பக்கம் கஜா புயலால் பாதிப்படிந்த பல்வேறு பகுதிகளில், மீட்பு பணிகள் துரிதமாக செய்யப் பட்டு வருகின்றன.அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
 

click me!