மட்டன், மீன், சிக்கனை விட நாய்க்கறி ரேட் ரொம்ப ஜாஸ்தியாம்... அடேய்... அடேய்... அடேய்...

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 9:45 AM IST
Highlights

நாகலாந்து மாநிலத்தில். இங்கு மீன், ஆடு, மாட்டு கறிகளை விட நாய்கறி வகை உணவுகள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து நாய்களை டெம்போ வைத்துக் கடத்தும் கூத்துகளும் அவ்வப்போது நடைபெறுகின்றனவாம்.

நாலாவது நாளாக நீடித்துவரும் நாய்க்கறி பஞ்சாயத்து இன்றும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. செம்மறி ஆடு, நாய்போல் நீளமாக வால் இருக்கும் நாகலாந்து ஆடு என்று மக்கள் ஆளாளுக்கு குழப்பிக்கொண்டிருக்க,  நாய்க்கறின்னா அவ்வளவு சாதாரணமில்லீங்க. அது மீன், சிக்கனை விட வில கொஞ்சம் காஸ்ட்லி என்று சிலர் குரைக்க ஸாரி உரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

ஆனால் இது நாகலாந்து மாநிலத்தில். இங்கு மீன், ஆடு, மாட்டு கறிகளை விட நாய்கறி வகை உணவுகள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து நாய்களை டெம்போ வைத்துக் கடத்தும் கூத்துகளும் அவ்வப்போது நடைபெறுகின்றனவாம். நாகாலாந்தின் அண்டை மாநில போலீசாருக்கு அவ்வப்போது பெரும் தலைவலியாக இருப்பது  இந்த ‘நாய்’ கடத்தல் கும்பல்தான். குறிப்பாக அஸ்ஸாமில் இருந்து தெருவில் திரியும் நாய்களை நாகாலாந்துக்கு கடத்தும் சம்பவங்கள்தான் அதிகரித்திருக்கின்றன. 

நாகாலாந்து தலைநகர் கோஹிமா மற்றும் திமாப்பூர் நகரங்களில் நாய்கறி விற்பனைக்கு என தனி சந்தைகள் இயங்கி வருகின்றன. நாம் ஆடுகளை வெட்டும் லாவகம் வேறு.. ஆனால் நாகாலாந்துவாசிகள் நாய்களை பிடிக்கும் போதே கொடூரத்தைக் காட்டி விடுகின்றனர். நாய்களை கம்பிகள், கயிறுகளால் கட்டித்தான் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சாக்குகளில் நாய்களை அடைத்து கொடூரமாக தாக்கி மரணிக்க வைக்கின்றனர். 

பின்னர் அவற்றை தீயில் வாட்டி அப்படியே விற்பனைக்கு தொங்க விடுகின்றனர். அந்த மக்களைப் பொறுத்தவரையில் நாய்கறி என்பதுதான் அதிக விலையானது. சமூக அந்தஸ்துக்கும் உரியது. தற்போது தமிழகத்தில் நாய்க்கறி சமாச்சாரத்திற்கு மக்கள் ஏன் இப்படி வள்ளென்று குதிக்கிறார்கள் என்பது அம்மாநில மக்களின் ஆச்சரியமான கேள்வி.

click me!