ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதுங்கள்...! ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Aug 18, 2022, 1:15 PM IST
Highlights

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்  அவசர தடை சட்டத்தை  அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

ஆன் சூதாட்டம்- தற்கொலைகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பொதுமக்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து ஆன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தநிலையில் ஆன் லைன் விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர தமிழக அரசு சார்பாக ஓய்வு பெற்ற நீதிபதி  சந்துரு தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்துள்ளது. மேலும் தமிழக அரசு சார்பாக ஆன் லைன் சூதாட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் கருத்துகளை கேட்டகப்பட்டுள்ளது.  இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆன் லைன் சூதாட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆன் லைன் விளையாட்டிற்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

உயிருக்கு போராடும் யானை..! டிரோன் மூலம் தேடும் வனத்துறை... மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க திட்டம்

சூதாட்ட அரக்கனுக்கு முடிவுரை

இந்தநிலையில்,  ஆன் லைன் சூதாட்டம் அவசர சட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள்  எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; எடுக்கப்படும் என்று நம்புகிறேன்! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுனர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, சூதாட்ட நிறுவனங்களுடன் கலந்தாய்வு என தேவைக்கும் அதிகமாகவே  தமிழ்நாடு அரசு முன்தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது! அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத் தடையாகத் தான் இருக்க வேண்டும். எனவே, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து ஆன்லைன் சூதாட்டத்  தடை அவசர சட்டத்தை  அரசு பிறப்பிக்க வேண்டும்; ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே முடிவுரை  எழுதப்பட வேண்டும்! என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஸ்டாலின்.! நம்ப வைத்து ஏமாற்றுவது தான் சமூக நீதியா.? அண்ணாமலை ஆவேசம்
 

click me!