திடீர் ட்விஸ்ட் !! வங்கி கொள்ளையில் போலீசுக்கு தொடர்பு.. காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து தங்க நகைகள் மீட்பு..

By Thanalakshmi VFirst Published Aug 18, 2022, 12:52 PM IST
Highlights

சென்னையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு  உள்ளதாக எனப்து குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட  32 கிலோ தங்க நகைகளில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு  உள்ளதாக எனப்து குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட  32 கிலோ தங்க நகைகளில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முருகன்,காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார். மேலும் தனது கூட்டாளிகளுடன் சேர்த்து, வங்கி ஊழியர்களை கத்தி காட்டி மிரட்டி, பாதுகாப்பு பெட்டக அறையின் சாவி வாங்கி 11 கோடி மதிப்பிலான சுமார் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். 

மேலும் படிக்க:சென்னையில் வங்கி கொள்ளை.. 72 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி கைது.. 18 கிலோ தங்கம் மீட்பு.. நடந்தது என்ன..?

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளை கும்பலை பிடிக்க 11 தனிபடைகளை அமைத்தனர். வங்கியில் பட்டப்பகலில் நடந்தேறிய இந்த கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. கொள்ளை சம்பவம் நடத்த 72 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி முருகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர் . மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளை மூன்றே நாட்களில் போலீஸார் மீட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கித் தருவது தொடர்பாக பேரம் பேசிய கோவை நகை வியாபாரியின் உறவினரிடமும் விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளி முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட அரும்பாக்கம் வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், அங்கு தங்க நகைகள் வைக்கப்படிருக்கும் இடம் குறித்து நன்கு தெரிந்துக்கொண்டு திட்டம் போட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. திட்டம் போடுவதற்கு இந்த தமிழ் படத்தை தான் பார்த்தேன்..வாக்குமூலத்தில் பகீர்.

மேலும் வங்கியில் எப்படி கொள்ளையடிப்பது, போலீசிடம் சிக்காமல் எப்படி தப்பிப்பது என்பது குறித்து  நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டதாகவும் அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க முடிவு செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக , அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்ப்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது  வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு  உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

click me!