முடிவுக்கு வருகிறது மோதல் போக்கு? 45 நிமிடம் நடந்த சந்திப்பு! தைலாபுரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி!

Published : Jun 05, 2025, 11:14 AM IST
ANBUMANI AND RAMADOSS

சுருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் மூலம் தந்தை மகன் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமதாஸ் - அன்புமணி மோதல்

ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே மோதல் உச்சத்தை எட்டியது. இதனால், பாமக இரண்டாக உடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த வாரம் ராலாபுரத்தில் பேட்டியளித்த ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழப்பத்தில் தொண்டர்கள்

இதனையடுத்து அன்புமணி சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் திருமண மண்டபம் ஒன்றில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெருவாரியான மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அன்புமணி அவரவர் அந்த பதவியில் தொடர்வதாக கூறி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பாமகவினரை பெரும் குழப்பத்தில் தள்ளியது. ஆனால், ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் பாமக மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியும் பாமகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு வரும் வியாழக்கிழமை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ராமதாஸ் மகள்கள் காந்தி, கவிதா உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர்.

குருமூர்த்தி - ராமதாஸ் சந்திப்பு

இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அன்புமணியுடன் அவரது 3-வது மகளும் உடனிருந்தார். இந்த சந்திப்பை அடுத்து தந்தை மகன் மோதல் முடிவுக்கு வரும் என அக்கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அன்புமணி புறப்பட்ட பின் ஒரே காரில் வந்த குருமூர்த்தி, மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!