மார்ச்.24 அன்று ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும்... இன்று பிறை தென்படாததால் தலைமை காஜி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Mar 22, 2023, 10:49 PM IST
Highlights

தமிழகத்தில் ரமலான் நோன்புக்கான பிறை தென்படாததால் நாளை மறுநாள் 23 ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரமலான் நோன்புக்கான பிறை தென்படாததால் நாளை மறுநாள் 23 ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். அப்போது உணவு உண்ணாமல் நோன்பு இருப்பர். அதாவது, சூரியன் உதிப்பதில் இருந்து  சூரியன் மறையும் வரை அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள்.

இதையும் படிங்க: சென்னையில் மார்ச்.25 வரை டிரோன்கள் பறக்கத் தடை... ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி உத்தரவு!!

இதுபோல் 30 நாட்களுக்கு இருப்பர். இது இஸ்லாமியர்களின் முக்கிய கடைமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் அந்த மாதத்தை தேர்வு செய்து நோன்பு இருப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு ரமலான் நோன்புக்கான பிறைக்காக காத்திருந்தனர். ஆனால் பிறை தென்படவில்லை.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகள் பெற்ற 5 தமிழர்கள்!

இதை அடுத்து நாளை மறுநாள் 23 ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ரமலான் நோன்புக்கான பிறை தென்படவில்லை. ஆகையால் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 24.03.23 ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!