நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் உள்ளது. இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுப்படுவதற்கு முன்பு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.
இந்த நோன்பு மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களை தூய்மைப்படுத்த அல்லாவின் கருணையை பெறவும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நோன்பு காலத்தில் அதிகாலை சாப்பிட்டு, நாள் முழுவதும் அதாவது சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த நோன்பு முறையை பின்பற்றுகின்றனர்.
அதன்படி சூரிய உதயத்திற்கு முன்பு உணவு சாப்பிட்டு, நாள் முழுவதும் உணவு, தண்ணீர் அருந்தாமல் நோன்பு நோற்பார்கள்.. பின்னர் மாலையில் நோன்பை முடித்து உணவு எடுத்துக்கொள்வார்கள். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் வரை நோன்பு இருப்பது வழக்கம். இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும்
ஒவ்வொரு ஆண்டும் வானில் பிறை தென்பட்ட உடனே இந்த நோன்பு காலம் தொடங்கும்..
அதன்படி நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பு காலத்தின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
ரமலான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கும் என்றும், நரகத்தின் வாசல் மூடப்பட்டிருக்கும் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
மேலும் இந்த ரமலான் மாதத்தில் குர் ஆனை நினைவு கூறுவது மட்டுமின்றி, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு உதவுவது அல்லா உடனான பிணைப்பை வலுப்படுத்துவது, ஆன்மாவை தூய்மைப்படுத்துவதற்கான நேரமாகவும் இது கருதப்படுகிறது.