
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் உடல் நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ராம் மோகன் ராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருமான வரி துறை ரெய்டுக்கு ஆளாகி பதவியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு கைது நடவடிக்கையை எதிர்நோக்கி இருந்தார்.
அவரை வருமானவரித்துறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீடு அலுவலகம் மகன் தம்பி மைத்துனர் சம்பந்தி வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் கோடிக்கணக்கான ரூபாய்களும் கிலோக்கணக்கில் தங்கமும் சொத்து ஆவணங்களும் பிடிப்பட்டதன.
தமிழக அரசியல் வரலாற்றில் மோசமான கருப்பு புள்ளியாய் மாறிப்போன ராம்மோகன் ராவ் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் ராம்மோகன் ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும் விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்கவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.