
நான் குழப்பவாதியா ? விளக்கமளிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..
நான் ஒரு ஆன்மீகவாதி என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும், பெயர்,புகழ், பணம் இவற்றைவிட ஆன்மீகம்தான் எனக்கு முக்கியம் என்று ரஜினிகாந்த் பேசினார். ‘ரஜினிகாந்த் ஒவ்வொரு மத குருக்களின் பெயரை சொல்லி குழப்புகிறாரே...’, என்று மக்களும், ரசிகர்களும் நினைத்தது உண்டு ஆனால் நான் தெளிவான சிந்தனையுடம் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில புத்தகம் தமிழில் ‘தெய்வீகக் காதல்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா யோகதா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று புத்தகைத்தை வெளியிட்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த்,நான் ஒரு ஆன்மிகவாதி என்பதில் பெருமைப்படுகிறேன் என்றார்..
நான் சம்பாதித்த பணம், புகழ், பெயர் வேண்டுமா? ஆன்மீகம் வேண்டுமா என கேட்டால், ஆன்மிகம் தான் வேண்டும் என்று நான் சொல்வேன் என தெரிவித்தார்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு மத குருக்களின் பெயரை சொல்லி குழப்புகிறாரே என்று மக்களும், ரசிகர்களும் நினைத்தது உண்டு.
எனது முதல் குரு என் அண்ணன் சத்யநாராயணன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றேன். ராகவேந்திரரிடம் இருந்து பக்தியை கற்றேன்.
ரமண மகரிஷியிடம் இருந்து ‘நான் யார்?’, என்பதை எனக்குள்ளேயே தேட கற்றுக்கொண்டேன்.
தயானந்த சரஸ்வதியிடம் இருந்து சமூக பிரச்சினைகள், வேத நுணுக்கங்களை அறிந்தேன். இப்படி ஒவ்வொருவரிடம் இருந்தும் பலவற்றை நான் கற்றுக் கொண்டதால் எல்லா மதக்குருக்களும் நல்லவற்றையே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
ஆகவே நாள் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறேன் என தெரிவித்தார்.