மெரினாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாம்…  144 தடை உத்தரவை வாபஸ் பெற்றது சென்னை காவல் துறை…

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 06:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
மெரினாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாம்…  144 தடை உத்தரவை வாபஸ் பெற்றது சென்னை காவல் துறை…

சுருக்கம்

மெரினாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாம்…  144 தடை உத்தரவை வாபஸ் பெற்றது சென்னை காவல் துறை…

 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்துசென்னை மெரினா கடற்கரையில் தொடா்ந்து 6 நாட்களாக தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் கடைசி நாளான கடந்த 23ஆம் தேதி காலை போலீசார்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைகலைக்க வன்முறையை கையாண்டனா். 

அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா பகுதியில் மாணவர்கள் மீண்டும் கூடுவதாகக் கிடைத்த தகவலை அடுத்துமெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 29ம் தேதி முதல்பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 12ம்தேதி வரை அமலில்  இருக்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அண்ணா நினைவு நாளையொட்டி அரசியல் கட்சிகள் மெரினாவில் ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மெரினாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை மாநகரகாவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதேநேரம் மெரினாவில் கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும் தடைதொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
தேர்தலை சந்திக்கும் வரை நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாக மதிப்பிட முடியாது: சரத்குமார்