நீங்கியது  தடை : மெரினாவில் 144 தடை திடீர் வாபஸ் .....!

 
Published : Feb 04, 2017, 07:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
நீங்கியது  தடை : மெரினாவில் 144 தடை திடீர் வாபஸ் .....!

சுருக்கம்

நீங்கியது  தடை : மெரினாவில் 144 தடை திடீர் வாபஸ் .....!

மெரினா கடற்கரையில் போபட்டிருந்த, 144 தடை உத்தரவை திடீரென  ரத்து செய்து கமிசனர் ஜார்ஜ்  உத்தரவிட்டுள்ளார் . ஜல்லிகட்டுக்கு ஆதரவாண போராட்டத்தில்,  லட்சகணக்கான ,  மாணவரகள்  இளைஞர்கள் குதித்தனர்.

6 நாட்களுக்கு மேலாக நடந்த , போராட்டம் ஜனவரி 23 முடிவுக்கு வந்தது. அன்று நடந்த வன்முறையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான போலீசார் பொதுமக்கள்  காயமடைந்தனர்.

பொதுமக்கள் குடும்பத்தோடு ஜாலியாக கூடும் மெரினாவில், போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து அதன் தன்மையை மாற்றியது , சென்னையில்  புதியதொரு அனுபவம். இதை பாடமாக எடுத்துக்கொண்ட போலீசார், மெரினாவில்,  இனி யாரும் போராட்டம்  நடத்தக் கூடாது என்பதற்காக , நடவடிக்கைகளில்  மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் மாணவர்கள்,  இளைஞர்கள்  மெரினாவில் கூட வாய்ப்பு இருகின்றது என்று வந்த ரகசிய தகவல்களை அடுத்து  கடந்த  வாரம்  மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக   கமிஷ்னர் ஜார்ஜ்  அறிவித்தார்.

பிப்ரவரி 12 வரை இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தடை உத்தரவு போட்ட 6 நாட்களுக்குள் கமிஷ்னர் ஜார்ஜ் தடை உத்தரவை வாபஸ்  பெற்றார்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், தடையை வாபஸ் வாங்குவதாக ,தெரிவித்துள்ளார்

டெய்ல் பீஸ் :  மெரினாவில் 144  தடை உத்தரவு போட்ட பிறகு, நேற்று ஒரு வாலிபர் மணல் பரப்பில்  கொலை செய்யப்பட்டார் .  எழிலகம் அருகே  நேற்றிவு பாதுகாப்புக்காக  நின்ற இரண்டு  போலீசார் , இருசக்கர வாகனம் மோதி  காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!