
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக இலங்கையில் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில் நூற்றுக்கணக்காண மக்கள் நேற்று நல்லூர்கோயில் அருகே திரண்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு யாழ்பாணத்தின் வடபகுதியில் புதிதாக 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை லைக்கா குழுமத்தின் ஞானம் அமைப்பு இந்த வீடுகளை கட்டி இருந்தது. இந்த வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் மூலம் மக்களுக்கு வழங்கலைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன், தமிழர் வாழ்வு உரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு செல்லக்கூடாது என நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து, இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்வதாக அறிவித்தார். முன்னாள் அதிபர் மகிந்திரா ராஜபக்சேயின் மகன்நமல் பக்சேவும், தமிழக அரசியல் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாகரஜினிகாந்த் வரமுடியாமல் போய்விட்டது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் என்ன செய்தன என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், யாழ்பாணம் அருகே நல்லூர் கோயிலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில் ரஜினி பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. ஏறக்குறைய நூற்றுக்கணக்காண தொண்டர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.