மழைநீர் வடிகால் பணி.. ஒழுங்காக பணி செய்யாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயும்.. மேயர் பிரியா எச்சரிக்கை..

By Thanalakshmi V  |  First Published Jul 10, 2022, 5:41 PM IST

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
 


சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அன்னை வேளாங்கண்ணி குழுமம் மற்றும் இயற்கை மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. சென்னையிலும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 

மேலும் படிக்க:மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை.. அமைச்சர் கொடுத்த அமைச்சர்..

Tap to resize

Latest Videos

மேலும் பேசிய அவர், சென்னையில் மட்டும் முதல் தவணை தடுப்பூசி 99 சதவீத பேரும்,  இரண்டாவது தவணை தடுப்பூசி 87% பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். சென்னையில் பொதுமக்கள் வெளியில் வரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஒரு சில இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே அனைவரும் கண்டிப்பாக மாஸ்க அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க:மக்களே உஷார்!! மழைநீர் வடிகால் பணிகள்.. முக்கிய சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள்..மாநகராட்சி புது உத்தரவு

தொடந்து பேசிய அவர், சென்னையில் 1,300 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும். மழை நீர் வடிகால் பணிகளை சரிவர செய்யாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.

click me!