
கோடை தொடங்கியது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய வேளையில் வெளியே செல்ல வேண்டுமென்றால் வீடு திரும்பும் போது, நம்முடைய தோலின் நிறம் கூட மாறி இருக்கும்அந்த அளவிற்கு வெயில் கடுமையாக உள்ளது.
இந்நிலையில் கோடைக்கு இதமாய் தமிழகம் முழுவதும் பரவலாக ஓரளவிற்கு மழை பெய்து வருகிறது. மழை பெய்வது இதமாய் இருக்கிறதோ இல்லையோ ஆனால் உச்சகட்ட வெயில் நிலவும் போது , தற்போது ஆங்காங்கு பெய்து வரும் மழையால், மனதிற்கும் சரி நம் உடம்பிற்கும் சரி இதமாய் இருக்கிறது என்றே கூறலாம்
இது தவிர மேலும் சில தினங்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதுவும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
இதனால் தமிழக மக்கள் கொஞ்சம் குளிர்ச்சி மழையில் மூழ்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .