கூடுதலாக மருத்துவப்படிப்புக்கு 174 இடங்கள் - தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

 
Published : Mar 16, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
கூடுதலாக மருத்துவப்படிப்புக்கு 174 இடங்கள் - தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

சுருக்கம்

In addition to the 174 seats maruttuvappatip - State budget allocation

2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், மருத்துவப் படிப்புக்கான கூடுதலாக 174 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புக்கான இடங்கள் எண்ணிக்கை 1188 ல் இருந்து 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875ல் இருந்து, ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில்,மாநிலத்தில் உள்ள 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்,  100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளஸ்2   மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச லேப்டாப் வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக  பள்ளிக் கல்விக்கென தமிழக பட்ஜெட்டில் ரூ.26 ஆயிரத்து932 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் தமிழகத்தில் மருத்துப்படிப்புக்கு ஆயிரத்து 188 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கிராமப்புற மாணவர்களை அதிகமான வாய்ப்புகளை கொடுக்கும் நோக்கில் கூடுதலாக இந்த ஆண்டு முதல் 174 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான இடங்கள் எண்ணிக்கை ஆயிரத்து 1362 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!