இன்னும் மழை இருக்கு..! அடித்து சொல்லும் வெதர்மேன்..!

By thenmozhi gFirst Published Nov 9, 2018, 3:09 PM IST
Highlights

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என  வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என  வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, அடுத்த 4 முதல் 5 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கிவர உள்ளது. அந்தமான் நோக்கி நகரும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறும் சாத்தியமும், தமிழகத்தை நோக்கி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கில் இருந்து வருவதால், மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும், அதைக் கணிக்க சில நாட்கள் தேவைப்படும் என்றும் அவர்  தெரிவித்து உள்ளார். மேலும், அடுத்த சில நாட்களில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமா அல்லது தாழ்வுப் பகுதியா அல்லது புயலா என்பது தெரிந்துவிடும். 

வரும் 14-ம் தேதிக்குப் பின் இதன் தாக்கம் பற்றி சரியாக கணிக்க முடியும் என கூறி சில படத்தையும்  வெளியிட்டு விளக்கம் கொடுத்து உள்ளார் பிரதீப் ஜான்.

இந்த இடைப்பட்ட 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்டவானிலையே காணப்படும். இரவு நேரத்தில் அதிகமான குளிர்ச்சி காணப்படும், காலை நேரத்தில் பனித்துளிகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

வடகிழக்குப்பருவமழை தொடங்கி ஒருவாரம்தான் முடிந்திருக்கிறது. ஆதலால், பருவமழை பொய்த்துவிட்டதாக இப்போதே நாம் கணித்து விட முடியாது என்றும் அவர் தெரிவித்து  உள்ளார். குறிப்பாக மீனவர்கள் வரும் 11 ஆம் தேதிக்கு மேல் கடலுக்குள் செல்லும் முன் வானிலை நிலவரத்தை அறிந்துக்கொண்டு செல்வது நல்லது. அதுமட்டுமில்லாமல் கடல் நல்ல கொந்தளிப்புடன்  காணப்படும் என்பதால் கவனம் தேவை என்றும் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!