இனி அரசு அலுவலர்களுக்கும் ஆப்பு... இவர்களுக்கும் ஆப்பு... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

By vinoth kumarFirst Published Nov 9, 2018, 1:36 PM IST
Highlights

அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என பிரித்து பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என கடந்த  ஜூலை மாதம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

கடந்த ஒரு வாரத்துக்கு முன், தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புரோக்கர்கள் பலரும் சிக்கினர். ஆரம்பத்தில் அவர்களிடம் விசாரித்தபோது, அரசு ஊழியர்கள் என கூறினர். பின்னர் முறைப்படி விசாரித்தபோது, அவர்கள் புரோக்கர்கள் என தெரிந்தது. 

இதைதொடர்ந்து, அரசு அலுவலகங்களில் பணத்தை பறிமுதல் செய்ததுடன், புரோக்கர்களையும் கைது செய்தனர். இதுதொடர்பான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையொட்டி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!