ம.பி.க்கு மாற்றியதால் விரக்தி…! ஐகோர்ட் மூத்த நீதிபதி ராஜினாமா?

By vinoth kumarFirst Published Nov 9, 2018, 12:52 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், அவர் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், அவர் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ், 2வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். தற்போது இவரை, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு 3வது மூத்த நீதிபதியாக பணியிட மாற்றம் செய்துள்ளனர். 

இதனை மாற்றி உத்தரவிடும்படி, அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவர் வரும் 22ம் தேதிக்கு முன் அங்கு பதவியேற்க வேண்டும் என குலுவாடி ரமேஷுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 இடத்தில் இருந்த  நீதிபதிகுலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச நீதிமன்றத்தில் 3வது நீதிபதியாக மாற்றப்படுவதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீதிபதி கர்ணன், இதேபோல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவர் தனது பணியிட மாற்றத்தை மாற்றி அமைக்க மனு செய்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதிப்பு செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டு, அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!