சென்னையில் இரவு நேரங்களில் கொட்டித் தீர்க்கப்போகுது மழை !! வெதர்மேன் சொன்னா கரெக்டா பெய்யும் !!!

 
Published : Nov 13, 2017, 05:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சென்னையில் இரவு நேரங்களில் கொட்டித் தீர்க்கப்போகுது மழை !! வெதர்மேன் சொன்னா கரெக்டா பெய்யும் !!!

சுருக்கம்

rain wil continue in night time in chennai

சென்னையின் வட பகுதியில் மேக கூட்டங்கள் அடுக்கடுக்காக வலுவடைந்து வருவதால் இரவு நேரங்களில் கன மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும்  பலத்த மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, புரசைவாக்கம், கண்ணதாசன்நகர், வியாசர்பாடி, எழும்பூர் , கிண்டி, ஈக்காட்டுதாங்கல், பாடி, மேற்குமாம்பழம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை  ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

இதே போன்று ,மாதவரம்,புழல், அடையாறு,ஆவடி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், மணப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மேடவாக்கம் , மடிப்பாக்கம்,கொடுங்கையூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மந்தைவெளி , திருமுல்லைவாயில், நுங்கம்பாக்கம் வடபழனி, நங்கநல்லூர், பல்லாவரம், பெருங்களத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, வானகரம், வண்டலூர், அம்பத்தூர், ராயப்பேட்டை, தரமணி, காளத்ததூர்,வில்லிவாக்கம் அசோக்நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், .சென்னையில்  சாலையில் எதிரே வருபவர் கூட தெரியாத அளவுக்கு அரைமணிநேரத்தில், எண்ணூரில் 70 மி.மீ மழையும் , நுங்கம்பாக்கத்தில் 40மி.மீ மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னையின் வடபகுதியில் மேகக்கூட்டங்கள் அடுக்கடுக்காக வந்து வலுவடைந்து இருக்கிறது. என்றும் அதனால்  வடசென்னை  வழியாக மழைமேகங்கள் நுழைந்து மேலும் மழையை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அதே  நேரத்தில்   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து வேறு எங்கும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!