
இலங்கை மற்றும் அந்தமான் இடையே புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்று அழுத்தத் தாழ்வு நிலை, தமிழகம் நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை நாள்ளிரவு முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு, மேல்நோக்கி வங்கதேசத்துக்கு நகர வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதேபோல், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் லோசான மழை பெய்யும். தென் தமிழகத்தில் வாரத்தில் 3 நாட்கள் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வினால், அடுத்த மாதம் வரை ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. கத்திரி வெயில் கொளுத்தும் நேரத்தில் சென்னையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.