
வடகிழக்குப் பருவமழை நல்ல மழைப் பொழிவுடன் துவங்கியுள்ளது. சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில் பொதுவாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்ப ட்டது.
இந்நிலையில், கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் இன்று திறந்து விடப்பட்டது.
மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் அணையைத் திறந்து வைத்தனர்.
அதே போல், பாசன வசதிக்கென, வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்!
இதே போல், சென்னையிலும் பலத்த மழை பெய்தது. இன்று காலை முதல், பாரிமுனை, மண்ணடி, ராயபுரம், வண்ணாரபேட்டை, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், திருவான்மியூர், பெரம்பூர், ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.