உஷார் மக்களே..! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை.. சென்னையில் இன்று மழை.. வானிலை அப்டேட்.

Published : Jun 26, 2022, 02:59 PM IST
உஷார் மக்களே..! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை.. சென்னையில் இன்று மழை.. வானிலை அப்டேட்.

சுருக்கம்

தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்குதிசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

26.06.2022. 27.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை
பெய்யக்கூடும்‌.

28.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

29.06.2022. 30.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:மீண்டும் லாக்கப் மரணம்..முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் ? டிடிவி தினகரன் கண்டனம் !

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொழுந்து விட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்பு வீரர்கள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

26.06.2022 முதல்‌ 28.06.2022 வரை: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

மேலும் படிக்க:பழைய பேப்பர் கடையில் கிடந்த பல்கலைக்கழக விடைத்தாள்கள்.. அதிர்ச்சி சம்பவம் !

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Today 18 January 2026: 58% டிஏ உயர்வு மட்டும் போதுமா? 8வது ஊதியக் குழுவுக்கு முன்பே வரப்போகும் குட் நியூஸ்
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்