மீண்டும் லாக்கப் மரணம்..முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் ? டிடிவி தினகரன் கண்டனம் !

By Raghupati RFirst Published Jun 26, 2022, 2:33 PM IST
Highlights

Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். பால்வடிக்கும் தொழிலாளியான இவரது மகன் அஜித் (22) ஐடிஐ முடித்து மினி லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

கன்னியாகுமரி - மரணம்

இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்த அஜித் குலசேகரம் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல்நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை. 

இந்த நிலையில் குலசேகரம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர்  சோனல் பிரதீப் இளைஞர் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டியுள்ளார். அதை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அஜித்தின் வீட்டிற்கு சென்று மிரட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். அதன் பிறகு அஜித்  விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறி  தந்தை சசிகுமாரை அழைத்து சென்றுள்ளார்.

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

டிடிவி தினகரன்

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இத்தகைய லாக்அப் மரணங்களைத் தடுக்க காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார் ? 

தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய லாக்அப் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.

கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. (1/5)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

ஒவ்வொரு முறை இப்படி நடக்கும் போதும் காவல்துறையினரோடு சேர்ந்து கொண்டு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பூசி மெழுகுவதையே வாடிக்கையாக வைத்திருப்பது சரியா? புகாருக்கு ஆளானவர்களை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டியதன் அவசியம், காவல்துறையினருக்கு புரியும் வகையில் தெளிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும். காவல் நிலையங்கள் மனிதநேயத்தோடும், மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

click me!