பழைய பேப்பர் கடையில் கிடந்த பல்கலைக்கழக விடைத்தாள்கள்.. அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati RFirst Published Jun 26, 2022, 2:14 PM IST
Highlights

Madurai : துணைவேந்தர் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதில், ஆன்லைனில் தேர்வு எழுதிய விடைத்தாள்களில், 15 கட்டுகள் காணாமல் போனது தெரியவந்தது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி திட்டத்தில், இளங்கலை, முதுகலை மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பல்கலையின் 'ஏ' மற்றும் 'பி' பிளாக்கில் வைக்கப்பட்டிருந்தன. இங்கு தான் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெறும். தொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட கண்காணிப்பாளர் ஒருவர், விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சென்றார்.

அப்போது, விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தன. துணைவேந்தர் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. இதில், ஆன்லைனில் தேர்வு எழுதிய விடைத்தாள்களில், 15 கட்டுகள் காணாமல் போனது தெரியவந்தது. மாயமான விடைத்தாள்கள், மதுரை அச்சம்பத்து, ராஜம்பாடியில், பழைய காகிதங்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருப்பது தெரியவந்து, அவை மீட்கப்பட்டன என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

விடைத்தாள்கள் மீட்பு

துணைவேந்தர் குமார் கூறுகையில், '’காணாமல் போன விடைத்தாள்கள் மூன்று இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றார். தொலைநிலை கல்வி மையத்தில் வினாத்தாள்கள் வைக்கப்பட்ட பிளாக்கின் கண்ணாடிகள் உடைந்து பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. 

மேலும் தொலைநிலை கல்வி மைய அதிகாரிகளும் பணியில் அலட்சியமாகவும் செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. செமஸ்டர் தேர்வு விடைத்தாள்கள், பழைய பேப்பர் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம், பல்கலை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

click me!