
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயரவில்லை. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி இன்று உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.