"மழை வரப்போகுது...!" - குடை எடுத்துட்டு போங்க மக்களே..!

 
Published : Apr 27, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
"மழை வரப்போகுது...!" - குடை எடுத்துட்டு போங்க மக்களே..!

சுருக்கம்

rain in 12 districts says weather department

கோவை, ஈரோடு, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அனல் காற்றுடன் கூடிய வெப்பம் நிலவி வருகிறது. 

திண்டுக்கல்லில் முதியவர் ஒருவர் கடும் வெப்பத்தின் காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, திருப்பூர்,  என 12 உள்மாவட்டங்களில் அடுத்த மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாவட்டங்களின் சில இடங்களில் வெயிலின் அளவு அதிகரித்தே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!