மக்கள் போராட்டத்திற்கு மதிப்பில்லை- போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட மதுக்கடை

Asianet News Tamil  
Published : Apr 27, 2017, 04:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
மக்கள் போராட்டத்திற்கு மதிப்பில்லை- போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட மதுக்கடை

சுருக்கம்

there is no value for human protest

திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையத்தில் பலத்த பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் தொழிற்பேட்டை அருகே உள்ள பேருந்துநிலையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் மக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் நேற்று மதுக்கடையை ஒட்டி இருந்த பாரை உடைத்து நொறுக்கினர். மேற்கூறை, நாற்காலிகள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவை சூறையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்களை விடுவிக்கக்கோரி அப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்தச் சூழலில்  மூடப்பட்டிருந்த மதுக்கடை இன்று மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வாய்ப்பை தவறவிடாதீர்கள்! தாட்கோ கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு! அப்பல்லோ மருத்துவமனையில் வேலை.. ரூ.5,000 உதவித்தொகை!
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!