முடங்கியது வட சென்னை அனல் மின் நிலையம்…ஒட்டுமொத்த தமிழகத்திலும் மின் வெட்டு ஏற்படும் அபாயம்..

First Published Apr 27, 2017, 9:53 AM IST
Highlights
power cut


முடங்கியது வட சென்னை அனல் மின் நிலையம்…ஒட்டுமொத்த தமிழகத்திலும் மின் வெட்டு ஏற்படும் அபாயம்..

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக மொத்த மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்வெட்டால் பாதிக்கப்பட்டது. வட சென்னை , அண்ணா நகர், வில்லிவாக்கம்  உள்ளிட்ட பகுதிகளில் நேற்று  இரவு 9 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டு தொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில்  வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக, மொத்தமாக 1,830 மெகாவாட் மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2ம் அலகில் 1,200 மெகாவாட் மின்உறபத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப பாதிப்பு காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1830 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மொத்த உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மின் வெட்டும் சேர்ந்து கொண்டால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள்.

click me!