எந்த தேதியில் எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் தெரியுமா..? துல்லியமான கணிப்பு உள்ளே..!

By thenmozhi gFirst Published Nov 21, 2018, 3:31 PM IST
Highlights

எந்த தேதியில் எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் தெரியுமா..? துல்லியமான கணிப்பு உள்ளே..!

கஜா புயலை  தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  நல்ல  மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உருவாகி உள்ள குறைந்த தாழ்வு மண்டலம்  வலுப்பெற்று வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இதன் பலனாக வட தமிழகம்,  புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அதன்படி தமிழகம் &  புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை  பெய்யக்கூடும் என்பதை பார்க்கலாம்.

மிக கனமழை பெய்யக்கூடிய இடங்கள் 

நாகை வடக்கு முதல் நெல்லூர் வரை கடலோர பகுதியில் மிக கன மழை பெய்யும் அதிக வாய்ப்பு உள்ளது 

மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள் 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகை வடக்கு, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் வடக்கு எல்லை தஞ்சாவூர் மாவட்ட அணைக்கரை, சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் 

சேலம், திருச்சி மாவட்ட துறையூர் பகுதி, நாமக்கல் மாவட்ட வட கிழக்கு பகுதி,  தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, பெங்களூரு மைசூர், திருப்பதி, சித்தூர், நெல்லூர், குப்பம், கோலார் கன மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் இன்று முதல் நாளை பிற்பகல் வரை தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்....ஏற்கனவே புயல் பாதித்த இடங்களான  வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் நாளை மறுதினம் வரை லேசான  மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே வேளையில் நவம்பர் 24  முதல் 28  வரை தமிழகத்தில் மழை பெய்யாது என்றும், ஆனால் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

click me!