
திரும்பவும் தொடங்கிருச்சுப்பா சென்னையில் மழை… நவம்பர் 5 ஆம் தேதி வரை கொட்டப் போகுதாம் !!!
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய,விடிய மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதனால் நேற்று முன்தினத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
நேற்று காலை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பல மிதமான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழை பெய்யத்தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் வரும் 5 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.