
இந்த ஆண்டு 62 சதவீத மழை குறைவு….. தமிழகம் கடும் வறட்சியை சந்திக்குமா?
2015 டிசம்பர் மாதத்தை யாராலும் மறக்க முடியாது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவுக்கு பெரு வெள்ளத்தைச் சந்தித்தது.அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்ததால் வறட்சியில் இருந்து தமிழகம் தப்பித்தது.
இந்த ஆண்டு வழக்கமாக பெய்யும் பருவமழை பொய்த்துப் போனது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வார்தா புயல் காரணமாக ஓரளவு மழை பெய்தது.
அதேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை வர்தா புயல் ஏற்படுத்திவிட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு 62 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வறட்சி நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே திமுக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மாவட்டங்களில் கடலோர பகுதியிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.