இரயில்வே பாதைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு…

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
இரயில்வே பாதைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு…

சுருக்கம்

மானாமதுரை,

இரயில்வே பாதைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து, மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி – மானாமதுரை வரை உள்ள அகல இரயில் பாதையை ஆய்வு செய்ய வருகிற 22–ஆம் தேதி தென்னக இரயில்வே மண்டல பொது மேலாளர் வருகை தர உள்ளார்.

இதனை முன்னிட்டு மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் நேற்று காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை உள்ள இரயில்வே பாதைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இறுதியாக மானாமதுரை இரயில் நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு காணப்படும் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சிவகங்கையில் – மானாமதுரை இடையே இரயில் என்ஜின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அனைத்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

இந்த ஆய்வின்போது துணை கோட்ட மேலாளர் முரளி கண்ணன், செந்தில்குமார், மானாமதுரை இரயில் நிலைய மேலாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் சென்ற பி.டி.உஷா.. கணவர் அதிர்ச்சி மரணம்..! வீட்டில் நடந்தது என்ன.?
மாத இறுதியில் கூட கருணை காட்டாத தங்கம், வெள்ளி? இன்று சவரன் ரூ.4,800 குறைவு.. குஷியில் நகைப்பிரியர்கள்