
சென்னை தி.நகரில் உள்ள நடிகை ராதிகாவிற்கு சொந்தமாக அலுவலகம் உள்ளது. இங்குதான் அவர் எடுத்து வரும் சீரியல் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு வருகிறது .
ராடன் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் ராதிகா, சென்னை தி நகரில் தன்னுடைய அலுவலகத்தை வைத்துள்ளார் .
இந்நிலையில் தற்போது வருமானவரைத்துறையினர், நடிகை ராதிகா அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் .
இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிகிழமையன்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் , நடிகருமான சரத் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில், நடிகர் சரத் குமாரின் மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் அலுவலகத்தில் இன்று பிற்பகல் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வருமானவரித்துறையினர்