மோடிக்கு போட்டியாக இன்று தமிழகத்தில் களம் இறங்கும் ராகுல் காந்தி... நெல்லை, கோவையில் சூறாவளி பிரச்சாரம்

By Ajmal KhanFirst Published Apr 12, 2024, 9:16 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு வரும் நிலையில், இதற்கு போட்டியாக தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். 
 

போட்டி போடும் அரசியல் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தமிழகத்தை குறிவைத்து தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இதே போல மத்திய அமைச்சர்களும் பாஜக நிர்வாகிகளும் அடுத்தடுத்து களம் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் பாஜகவினருக்கு டப் கொடுக்க தமிழக அரசியல் களத்தில் ராகுல் காந்தி இறங்கவுள்ளார். இன்று மாலை நெல்லை மற்றும் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 

தமிழகத்தில் ராகுல்காந்தி

மாலை 3:50 மணிக்கு நெல்லைக்கு வர இருக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு, நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்ய போகிறார்.

இதனையடுத்து கோவைக்கு செல்லும் ராகுல் காந்தி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் செட்டிபாளையத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். அங்கு கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, ஈரோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஸ்டாலின்- ராகுல் பிரச்சாரம்

கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட முறையில் நடத்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியோடு இணைந்து பிரச்சாரம் செய்யுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தியின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

திமுக இருந்தால் கூட பரவாயில்லை! அதிமுக அழியவேண்டும் நினைத்த அண்ணாமலை! இதெல்லாம் அற்ப புத்தி! ராஜ் சத்யன்!

click me!