அபாராதம் வசூலிப்பது சாதனை இல்லை, எங்களில் வேதனை.... ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Jan 14, 2022, 4:07 PM IST
Highlights

அபராதம் வசூலிப்பது சாதனை இல்லை, வேதனையாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அபராதம் வசூலிப்பது சாதனை இல்லை, வேதனையாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா என்பது அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது.  மற்றுமொரு பக்கம் ஒமைக்ரான் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்த நிலையில், தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைத் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. அதேசமயம் கொரோனா  நடைமுறைகளை கடைபிடிக்காத வர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூபாய் 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தனர்.  இந்த சூழலில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து  500 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே  சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில், மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில், கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் அலையை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒமைக்ரான் தொற்று பரவும் வேகம் அதிகரிப்பதால், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால், மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் பரவும் வேகம் குறையும். டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 25 முதல் 30 சதவீதத்தினருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது.

ஒமைக்ரான் பாதிப்பில் 5 முதல் 10 சதவீதம் தான் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, குறைந்த அளவே நுரையீரல் பாதிப்பு உள்ளதால், 1 சதவீதத்தினருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளது. கூடுதலாக கொரோனா தடுப்பூசி வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அபராதம் வசூலிப்பது எங்களின் சாதனை இல்லை, வேதனையாக உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். மருத்துவரின் அறிகுறியுடன் மட்டுமே மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும். கூகுள் மருத்துவர்களாக யாரும் மாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

click me!