
கோடை காலம் வந்தால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். இது ஆண்டு தோறும் நடக்கும் சம்பவம்தான். அதே நேரத்தில் வெயில், வாட்டி வதைப்பதும், இதனால் பலிகள் ஏற்படுவதும் அதிகரிப்பதும் வடிக்கையாகிவிட்து.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட், வேலூர், கோவை, தருமபுரி ஆகிய பகுதிகளில் 101, மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடை காலத்தில் சுற்றுலா செல்லும் பகுதியான கொடைக்கானலில், குறைந்தபட்சமாக 70 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.