விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி!! மாடு முட்டியதால் பரிதாபம்

By vinoth kumar  |  First Published Jan 20, 2019, 4:05 PM IST

புதுக்கோட்டையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 


புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஏராளமான பார்வையாளர்களும் பங்கேற்றனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இலுப்பூரில் இருந்து ஜல்லிக்கட்டை பார்க்க வந்த ராமு (25) என்பவர் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் மற்றொருவர் சதீஷ்குமார்(43) என்பவரும் காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,040 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். 

click me!