கன்டெய்னர் லாரி- வேனும் நேருக்கு நேர் மோதல்... ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Jan 6, 2019, 4:22 PM IST

புதுக்கோட்டையில் கன்டெய்னர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


புதுக்கோட்டையில் கன்டெய்னர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வேன் சென்றிக்கொண்டிருந்த போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்தார்.

click me!