தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து... 29 பேர் படுகாயம்...!

Published : Dec 31, 2018, 11:42 AM IST
தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து... 29 பேர் படுகாயம்...!

சுருக்கம்

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 குழந்தைகள், 11 பெண்கள் உட்பட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 குழந்தைகள், 11 பெண்கள் உட்பட 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

பட்டுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாகப் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுக்கோட்டைக்குத் தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் வந்ததால், பிரேக் அடித்தும் பேருந்தை ஒட்டுநரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இதனால், எதிர்பாராத விதமாகக் பலத்த சத்தத்துடன் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

 

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து வெளியே வரமுடியாமல் கூச்சலிட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரித்தனர். உடனே காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உடனே விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சித்தலைவர் கணேஷ் ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் ஒட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
டாஸ்மாக் ஊழல்! டெல்லியில் எப்படி ஆம் ஆத்மி தோற்றதோ அதுபோல திமுக தோற்கும்! டிடிவி. தினகரன்!