திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணமுத்துப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பார்த்திபன் (24). இதே ஊரைச் சேர்ந்த சங்கிலிமுத்து மகன் அனுப்பிரியா (22). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெண் வீட்டார் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் காதலுக்கு பார்த்திபன் தாய் எதிர்ப்பு தெரிவித்தாராம்.
அப்படி இருந்த போதிலும் கடந்த 18-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதை அறிந்த பார்த்திபனின் அம்மா கவிதா, அங்கு சென்று, மகனை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். பார்த்திபன் செல்லவில்லை. மேலும் பெண் வீட்டாரிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், அனுப்ரியா வீட்டிற்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது தொடர்பாக பெண்வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பார்த்திபன் தாய் கவிதா அளித்த புகாரின் பெயரில், பெண் வீட்டார் 5 பேர் மீது வழக்கு பதிவானது.
இந்நிலையில் திருமணமான, நான்காவது நாளில், காதல் கணவன் இறந்த விரக்தியில் இருந்து வந்தார். வேதனையின் உச்சத்தில் இருந்த அனுப்பிரியா, நேற்று மதியம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த ஆறே நாளில் காதல் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.