Politician R Sarathkumar : புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா சரத்குமார் அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் "புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரும் மனதையும் தீரா வேதனையில் கலங்கடிக்க செய்துள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டுமான களத்தில் போராடி வந்துள்ளனர்."
undefined
இருட்டறையில் யுகேஜி சிறுமிக்கு பள்ளியில் வைத்து பாலியல் தொல்லை! தெனாவட்டாக பதில் அளித்த பிரின்ஸ்பல்!
"இந்த கொலை வழக்கில் பல்வேறு விதமாக கருத்துக்கள் நிலவி வருகின்றன பச்சிளம் சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்து மிருக இனமாக மாறி சிறிய உயிரே குற்றவாளிகள் கொடூரமாக கொலை செய்ததற்கு போதை தான் காரணமாக இருக்க முடியும் என தோன்றுகிறது. ஆனால் இது போதையாக இருந்தாலும் சரி வக்கிர புத்தியால் நடந்தாலும் சரி, எண்ணங்கள் சீர் கெட்டு சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுத்த இது போன்ற சம்பவங்களை இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் சமுதாயத்தில் நடந்துவிடக்கூடாது".
"இதனை தீவிர விசாரணை வாயிலாக கண்டறிய வேண்டும். மேலும் குற்றம் நடைபெற்றால் பெற்றோர்கள் உறவினர்கள் மட்டும்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமா? அப்போதான் அதிகாரிகள் பிரச்சினையின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா? இது போன்ற சம்பவங்கள் தங்கள் குடும்பத்தில் நேர்ந்தால் வலியும், வேதனையும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்".
"கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளிகள் எத்தனை கொடூரமானவர்கள் என்பதை உணர்ந்து சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்வும், இனி எவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயலில் ஈடுபட துணியாத வகையிலும் புதுச்சேரி அரசு ஊழியர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வழக்கினை கால தாமதம் செய்ய அனுமதிக்காமல் அரசியல் சாசன அடிப்படையில் உச்சபட்சமாக மரண தண்டனை பெற்றுத்தர ஆவணம் செய்ய வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்."
"சிறுமியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா சரத்குமார்.
முதல்வர் ரங்கசாமி செய்த பாவத்தின் அறுவடை தான் சிறுமியின் படுகொலை; முன்னாள் எம்எல்ஏ விளாசல்