திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா உள்ளிட்டோர் வந்து தங்கள் விருப்ப மனுவை இன்று திமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினர்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமனு வழங்குவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளராகப் போட்டியிட 2984 பேர் வாய்ப்புக் கேட்டு விருப்பமனு பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
undefined
அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி முதல் திமுக தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திமுகவைச் சேர்ந்த நிர்வாகள், தொண்டர்கள், செயல்பாட்டாளர்கள் தங்கள் விருப்பமனுவை சமர்ப்பித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் 2024: ஓட்டு போடுவதற்கு முன் இந்த 7 விஷயங்களைத் தெரிஞ்சுக்கோங்க!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளரகாகக் களமிறங்கி விரும்பும் பலர் தங்கள் விருப்பமனுவை பூர்த்தி செய்து, ரூ.50,000 கட்டணத்துடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து வந்தனர். இந்த நிலையில், விருப்பமனு சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்று (மார்ச் 7) மாலை 6 மணியுடன் முடிகிறது.
கடைசி நாளான இன்று, காலை முதல் விருப்ப மனுக்கள் வழங்கல் பரபரப்பாக நடந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற, தற்போதைய திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா உள்ளிட்டோர் வந்து தங்கள் விருப்ப மனுவை வழங்கினர்.
இந்நிலையில், திமுக வேட்பாளராகப் போட்டியிட மொத்தம் 2984 பேர் வாய்ப்புக் கேட்டு விருப்பமனு அளித்துள்ளனர் என்று கட்சி வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்