கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By SG Balan  |  First Published Mar 7, 2024, 6:25 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


சென்னை கொளத்தூர் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Tap to resize

Latest Videos

undefined

மேயர் சிட்டிபாபு பூங்காவில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினி, கல்வித் தொகை ஆகியவற்றையும் வழங்கினார். பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 2024: ஓட்டு போடுவதற்கு முன் இந்த 7 விஷயங்களைத் தெரிஞ்சுக்கோங்க!

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொளத்தூர் தொகுதியை தமிழகத்தின் மாடல் தொகுதியாக மாற்றும் நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பலவும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்போ நிதியுதவியோ இல்லாமலே மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன." என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மாநிலங்களை வஞ்சிக்காத ஒன்றிய அரசு அமைந்தால்தான் இன்னும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்று கூறிய முதல்வர், அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விடியல் ஒளியை இந்தியா முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

"மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் அரசு மகளிர் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது" என்றார்.

கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதி ஆகிய திட்டங்களை முதல்வர் சுட்டிக்காட்டினார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து அனைவரிடமும் எடுத்துக் கூறுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஜப்பானில் இருந்து இந்தியா வரும் 24 புல்லட் ரயில்கள்! மும்மை டூ அகமதாபாத் செல்ல 2 மணிநேரம் மட்டுமே!

click me!