
கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இன்று சென்னையில்இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத் தலைவரை அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்றார்.