காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்...

Asianet News Tamil  
Published : Apr 13, 2018, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Public Health Officers Demand to fill vacancies

விழுப்புரம்

காலிப் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சாலையில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அருள்முருகன் தலைமை வகித்தார். 

மாவட்ட துணைத் தலைவர் போஸ்கோ பெர்னாண்டஸ் வரவேற்றார்.  மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சங்க நிர்வாகி பாலாஜி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் ரவி, 

வணிக வரித்துறை சிவக்குமார், மருத்துவத் துறை ஊழியர் சங்க நாகராஜன், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயாலளர் தேசிங்கு, கண் மருத்துவ உதவியாளர்கள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு மற்றும் தொடர் பலன்களை கடந்த 7.11.2008 முன்தேதியிட்டு உடனே வழங்க வேண்டும், 

நலக் கல்வியாளர் மற்றும் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி துறை உயர் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்படும். என்றும், வரும் 19-ஆம் தேதி சென்னை இயக்குநரகத்தில் பெருந்திரள் முற்றுகை நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாநிலத் தணிக்கையாளர் பாலு நன்றித் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!