ஓட்டு கேட்க கூட நேரில் வரமாட்டாரா? ஜோதிமணிக்கு எதிராக எம்எல்ஏ.விடம் மக்கள் வாக்குவாதம்

By Velmurugan s  |  First Published Apr 13, 2024, 10:50 AM IST

கடந்த முறை வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவிக்கக் கூட தொகுதி பக்கம் வராத ஜோதிமணி தற்போது ஓட்டு கேட்கக்கூட வரவில்லை என்று கூறி வேடசந்தூர் பகுதி மக்கள் ஆதங்கம்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக கிராமப் பெண்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மோர்பட்டி, சித்துவார் பட்டி, பாலக்குறிச்சி, வடுகப்பட்டி, கொம்பேறிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேரடியாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது வடுகபட்டியில் சாலை வசதி நீண்ட நாட்களாக இல்லை என்று கூறி வருகிறோம் என்று எம்.எல்.ஏ. காந்தி ராஜனிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு விளக்கம் அளித்த காந்திராஜன் தங்கள் பகுதிக்கும் சேர்த்துதான் ரோடு போடுவதற்கு பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசு அதிகாரியாக பணிபுரிந்த ஆனந்தன் என்பவர் அதில் 15 கோடி ரூபாயை வேறு பகுதிக்கு ரோடு போட எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டார். அதனால் தான் இப்போதைக்கு சாலை போட முடியவில்லை நான் அமைச்சரிடம் கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை வைத்துள்ளேன் என்று கூறினார்.

தலைவிரித்தாடும் FEDEX கூரியர் மோசடி... சென்னையில் 5 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்..!

பின்னர் பெண் ஒருவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடுகிறாரா வேட்பாளர் ஜோதிமணி வராமல் இவர் எதற்கு வருகிறார் என்று கேள்வி எழுப்பினார். வெற்றி பெற்று ஜோதிமணி தொகுதி பக்கமே நன்றி தெரிவிக்க கூட வரவில்லை. இப்போது ஓட்டு கேட்கவும் வரவில்லை. ஊருக்குள் வரட்டும் அப்போது பார்த்துக்கொள்கிறோம். என்று பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!